சொல் பொருள்
(வி) 1. அடர்ந்திரு, செறிவாக இரு, 2. வெருவு,
சொல் பொருள் விளக்கம்
அடர்ந்திரு, செறிவாக இரு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be dense, close, fear
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஊர் குறு_மகளிர் குறு_வழி விறந்த வராஅல் அருந்திய சிறு சிரல் – அகம் 286/5,6 ஊரிலுள்ள இளைய பெண்கள் குற்றுங்கால் செறிந்த இரால் மீனைத் தின்ற சிறிய சிரற்பறவை பணை நிலை முனைஇய பல் உளை புரவி புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு நிலவு பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்து கிம்புரி பகு வாய் அம்பணம் நிறைய கலிழ்ந்து வீழ் அருவி பாடு விறந்து – நெடு 93-97 கொட்டிலில் நிற்பதை வெறுத்த நிறைந்த பிடரிமயிரையுடைய குதிரைகள் புல்லாகிய உணவை வாய் நிறைய மெல்லும்(போது ஏற்படும்) தனிமை (அமைதியைக்)கெடுக்கும் ஓசையோடு – நிலாவின் பயனை அரசன் நுகரும் நெடிய வெள்ளிய நிலாமுற்றத்திலுள்ள நீர்த்தூம்பின் (மீனின்)பிளந்த வாயாகப் பகுத்த உருளி நிறைகையினால், கலங்கி விழுகின்ற அருவியின் ஓசை(யும்) செறிந்து கோடு முற்று இளம் தகர் பாடு விறந்து இயல – அகம் 378/7 கொம்புகள் பொருந்திய இளைய கடாக்கள் இலியைக் கேட்டு அஞ்சி இரிய – விறந்து – அஞ்சி – நாட்டார் உரை, விளக்கம் – விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும் (தொல். சொல். 348) – Tamil Lexicon
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்