சொல் பொருள்
விலாங்கு (மலங்கு) – ஏமாற்று
சொல் பொருள் விளக்கம்
விலாங்கு ஒருவகை மீன். அது பார்வையில் மீன்போலவும் தோன்றும்; பாம்புபோலவும் தோன்றும். அதனால், விலாங்கைப் “பாம்புக்குத் தலையும்’ மீனுக்கு வாலும் காட்டும்” என்னும் நம்பிக்கை மக்களுக்கு உண்டாயிற்று. பாம்மையும் மீனையும், அவ்வவ்வினம் போலக் காட்டி ஏமாற்றும் என்பது கருத்தாம். அவ்வாறு ஆளுக்குத் தகப் பேசியும் நடித்தும் வாழுபவரை விலாங்கு என்பர். “அவன் ஒரு விலாங்கு; எங்கும் பிழைத்துக் கொள்வான்” என்பர். ஆளுக்குத்தகத் தன்னியல்பைக் காட்டுவது ஏமாற்றுவதுதானே!
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்