சொல் பொருள்
(வி.அ) சிறப்பாக,
சொல் பொருள் விளக்கம்
சிறப்பாக,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
excellently
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை – மலை 128 சீரிதாகக் கீழே வளர்ந்தன கொழுவிய கொடியினையுடைய கவலை – விழுமிதின் – சீரிதாக; சிறப்புடையதாக, விழுமம் சீர்மையும், சிறப்பும், இடும்பையும் – (தொல்-உரி-55) – பொ.வே.சோ உரை விளக்கம். விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின் தவறும் நன்கு அறியாய் – நற் 315/9,10 பெருமையாக நாம் கருதிக் கொண்ட நம் நட்பு எளிதில் தவறாகத் துன்பம் தருவதை நன்கு அறியாதிருக்கின்றாய்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்