Skip to content

சொல் பொருள்

சினம்கொள், சீறியெழு

சொல் பொருள் விளக்கம்

சினம்கொள், சீறியெழு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be angry, enraged

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உரவு சினம் செருக்கி துன்னு-தொறும் வெகுளும்
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி – குறி 130,131

மிகுகின்ற சினத்தால் செருக்கி, (தம் மேல் ஏதேனும்)நெருங்குந்தோறும் சீறிவரும்,
(மூங்கில்)முளை(போலும்) கூர்மையுள்ள பற்களையுடைய, பெரிய நகங்களையுடைய, நாய்

பாம்பு வெகுண்டு அன்ன தேறல் நல்கி – சிறு 237

பாம்பு சீறியெழுவதைப் போல் (உண்டவரைத் துள்ளி எழச்செய்யும்)கள்ளின் தெளிவைக் கொடுத்து,
– அடங்கிக்கிடக்கும் அரவு ஞெரேரெனச் சீறியெழுவதைப் போன்று, உண்ணுமுன்னர் வாளாவிருந்த
தேறல் உண்டவுடன் உண்டார் உள்ளத்தே ஞெரேரென வெறித்தெழுதலான். – பொ.வே.சோ விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *