சொல் பொருள்
வெடி வைத்தல் – அழித்தல்
சொல் பொருள் விளக்கம்
பாறையுடைத்தற்கு வெடி வைத்தல் பழங்காலச் செய்தி. இப்பொழுது வெடி வைத்தல் விளையாட்டுச் செயல் போலச் செய்தித் தாள்களில் விளம்பரப்படுகின்றன. விளைவுகளும் கொடுமையானவையாக உள. வானூர்தியையும், கப்பலையும், மக்கள் நெருக்கமிக்க அலுவலகம் தொழிலகம் ஆயவற்றையும் வெடி வைக்கும் கொடுமை நினைக்கவும் அச்சமிக்கவை. போர் ‘பாலத்தை’ வெடி வைக்கும் என்றால், வெறித்தனம் வைக்கும் வெடி அதனினும் மிக மிகக் கொடுமையானதாம். வெடி வைத்தல் அழித்தலுக்காகத் தானே நிகழ்கின்றது. ஆதலால், “எனக்கே வெடி வைத்து விட்டான்” என்பதில், என்னை அதிர்ச்சிக்கும் அழிவுக்கும் ஆளாக்கி விட்டான் என்னும் பொருள் வெளிப்படுகின்றதாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்