சொல் பொருள்
வெட்டி விடுதல் – நட்பைப் பிரித்தல்
சொல் பொருள் விளக்கம்
வெட்டி விடுதல் துண்டித்தல் பொருளது. கத்தரிக்கோல் கத்தரிப்பாலேயே பெற்ற பெயர். வெட்டரிவாள், வெட்டறுவாள், பாக்குவெட்டி, மண்வெட்டி என்பனவெல்லாம் வெட்டுதலால் பெற்ற பெயர்கள். வெட்டி விடுதலுக்குரிய துண்டித்தல் பொருள் நட்பைப் பிரித்தலுக்கும் பயன்படுத்தப்படுவதுண்டு. நீ தலையிட்டாய்; எங்களை வெட்டி விட்டாய் என்பதில் உயிர்க்கொலையை வெட்டுதல் சுட்டாமல் நட்புக் கொலையைச் சுட்டிற்றாம். கத்தரியிடுதல் என்பதும் துண்டித்தல் பொருளதே. கிடைக்க இருந்த அந்த வேலை அவரால் கத்தரியிடப்பட்டது என்றால் துண்டிக்கப்பட்டது கிடைக்காமல் செய்யப்பட்டது என்பதே பொருளாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்