சொல் பொருள்
வெண்டாளி
சொல் பொருள் விளக்கம்
வெண்டாளி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
White catamaran tree, Givotia rottleri formis
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குளவியொடு வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன் – திரு 191,192 காட்டு மல்லிகையுடன் வெண்டாளியையும் கட்டின கண்ணியினை உடைய; இது நெய்தல் நில வீடுகளின் முற்றத்தில், தாழையின் விழுதருகே வளரும். வலை உணங்கும் மணல் முன்றில் வீழ் தாழை தாள் தாழ்ந்த வெண்கூதாளத்து தண் பூ கோதையர் – பட் 83-85 வலைகிடந்து உலரும் மணலையுடைய முற்றத்தைக்கொண்ட இல்லங்களில், விழுதையுடைய தாழையின் அடியில் இருந்த வெண்டாளியின் குளிர்ந்த பூவால் செய்த மாலையையுடையோர், இது கார்காலத்தே மலரும். மலர்கள் உள்துளையுடையனவாக இருக்கும். மலைச்சாரலிலும் வளரும். கூட்டம்கூட்டமாக மலரும். கார் எதிர் தண் புனம் காணின் கை வளை நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த வெண்கூதாளத்து அம் தூம்பு புது மலர் ஆர் கழல்பு உகுவ போல சோர்குவ அல்ல என்பர்-கொல் நமரே – குறு 282/4-8 கார்ப்பருவத்தை எதிர்கொண்ட குளிர்ந்த புனத்தைக் காணும்போது, கை வளையல்கள் நீர் விளங்கும் மலைச் சாரலில் மொத்தமாக மலர்ந்த வெண்கூதாளத்தின் அழகிய உள் துளையுடைய புதிய மலர்கள் தம் காம்பிலிருந்து கழன்று உதிர்தலைப் போன்று கழன்று வீழ்வன அல்ல என்பாரோ நம் தலைவர்? இதன் செடி புதர்போல இருக்கும். பைம் புதல் நளி சினை குருகு இருந்து அன்ன வண் பிணி அவிழ்ந்த வெண்கூதாளத்து – அகம் 178/8,9 பசிய புதரிலுள்ள செறிந்த கிளைகளில் வெண்ணாரை இருந்தாலொத்த வெள்ளிய கூதளஞ்செடியின் அசையும் கொத்திலுள்ள வளம்பொருந்திய முகை விரிந்த மலரினைப் பொருந்தி தமிழ்ப்பேரகராதி இதனை ஒரு மரம் என்று கூறும். ஆனால் இலக்கியச் சான்றுகளைப் பார்க்கும்போது இது ஒரு புதர்ச்செடி அல்லது கொடி (Ipomoea sepiaria) என்றே தோன்றுகிறது. அகநானூற்று உரையில் நாட்டாரும் இதைச் செடி என்றே கொள்கிறார்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்