சொல் பொருள்
வெண்டைக்காய் – ‘வழவழா’ வெனப்பேசல்
சொல் பொருள் விளக்கம்
வெண்டைக்காய், வழு வழுப்புடையது. அத்தன்மை, அத்தன்மையையுடைய பேச்சுக்கு ஆகி வருதல் வழக்காயிற்று. யாராவது வழவழா எனப்பேசினால் “வெண்டைக்காய் நிறையப் பிடிக்குமா?” என்றோ, “விளக்கெண்ணெய் அளவுக்கு மேல் போட்டுவிட்டார்களோ?” என்றோ கேட்பது வழக்கம். “விளக்கெண்ணெய் விட்டு ஆக்கிய வெண்டைக்காய்க் குழம்பிலே தொட்டெழுதிய எழுத்து” என்பது எவ்வளவு வழுவழுப்பு. ஆனால் அதனைப் புரட்சி, விறுவிறுப்பு நடைக்கு ஒருவர் சொன்னால் சொன்னவர் புரட்சிப் போக்கின் அழுத்தம் புலனாம்; அல்லது வெறுப்புணர்வு புலனாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்