1. சொல் பொருள்
சோழநாட்டிலிருந்த ஓர் ஊர்
2. சொல் பொருள் விளக்கம்
சோழநாட்டிலிருந்த ஓர் ஊர்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
an ancient town in chozha land.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய வெண்ணி தாக்கிய வெருவரு நோன் தாள் கண் ஆர் கண்ணி கரிகால்வளவன் – பொரு 146-148 இரு பெரிய மன்னர்களும் ஒரே களத்தில் பட்டழியும்படி, வெண்ணி என்கிற ஊரில் பொருத அச்சந் தோன்றுகின்ற வலிமையையுடைய முயற்சியையும், கண்-நிறைந்த ஆத்தி மாலையினையும் உடைய கரிகாற்சோழனின் கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழை ஐது அகல் அல்குல் அணி பெற தைஇ – நற் 390/3-5 வள்ளல்தன்மை உடைய கிள்ளிவளவனின் வெண்ணி என்னும் ஊரைச் சூழவுள்ள வயல்களிலுள்ள வெள்ளாம்பலின் அழகான மடிப்புகளையுடைய தழையை மெல்லியதான அகன்ற அல்குலில் அழகுண்டாக உடுத்திக்கொண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்