சொல் பொருள்
வெந்நீரைக் காலில் விடல் – தங்காது புறப்படல்
சொல் பொருள் விளக்கம்
வெந்நீர் வெதும்பிய நீர். அதனைத் தண்ணீர் போல் விட்டுக் கொண்டிருக்க முடியாது. குறைவாகவும் விரைவாகவும் வெந்நீரை விடுவதே வழக்கம். ஏன் வெந்நீர் விடுகின்றனர்? கட்டி, புண் உண்டாகியிருந்தால் கழுவவும், காய்ச்சியடிக்கவும் வெந்நீர் பயன்படுத்துவர். அதனை மொத்தமாக வைக்காமல் ஒற்றி ஒற்றி எடுப்பார். அவ்வழக்கில் இருந்து, விருந்தாக வந்தவர் ஆர அமர இல்லாமல் புறப்பட்டால் “எப்பொழுது வந்தாலும் வெந்நீரைக் காலில் விட்டுக் கொண்டு தான் வருவது” என்னும் வழக்கு உண்டாயிற்று.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்