சொல் பொருள்
வெம்மை, கடுமை, துன்பம், கெடுதி,
சொல் பொருள் விளக்கம்
வெம்மை, கடுமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
severity, misfortune, calamity
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துப்பு துறைபோகிய வெப்பு உடை தும்பை கறுத்த தெவ்வர் கடி முனை அலற – பதி 39/3,4 போர்த்தொழிலின் முழுமையையும் கற்றறிந்த, கடுமையையுடைய தும்பை மாலையைச் சூடிய, சினங்கொண்டு வந்த பகைவர்கள், அச்சந்தரும் போர்முனையில் அலறியோடும்படி – போர்வீரரது வெம்மையைப் போர் மேல் ஏற்றி, வெப்புடைத் தும்பை என்று கூறினார் – ஔவை.சு.து.விளக்கம் – வெம்மை – கடுமை வேனில் அன்ன என் வெப்பு நீங்க அரும் கலம் நல்கியோனே – புறம் 397/17,18 வேனிற்காலத்து வெம்மை போல் வறுமையால் எனக்குண்டான துன்பமாகிய வெம்மை நீங்குமாறு பெறற்கரிய கலன்கள்பலவும் கொடுத்தருளினான்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்