Skip to content

சொல் பொருள்

வெப்பமாக, வெப்பமான, விரும்பத்தக்க, வெப்பமானது, கொடியது, விரும்பத்தக்கது, பெரிதாயுள்ளது, கொடிதானவை

சொல் பொருள் விளக்கம்

வெப்பமாக

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

hotly, hot, desirable, that which is hot, that which is fierce, cruel, that which is desirable, (it is)very big, (they are) very fierce / cruel

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொல்லன்
விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிரா – அகம் 224/2,3

கொல்லன்
வலித்து இழுக்கும் துருத்தியினைப் போல வெப்பமாகப் பெருமுச்சுவிட்டு

வெய்ய உயிர்க்கும் சாயல்
மை ஈர் ஓதி பெரு மடத்தகையே – நற் 29/10,11

வெம்மையாக உயிர்க்கினற மென்மையையும்
கரிய ஈரிய கூந்தலையும் பெரிய மடப்பத்தையுமுடைய தகுதிப்பாடுடைய என் புதல்வி

வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
கண்படை பெறேன் கனவ – அகம் 55/8,9

தீயில் வேவது போன்ற வெம்மையான நெஞ்சமுடன்
கண்ணைமூடாமல் கனவு காண்கிறேன்;

வெய்ய திமிலின் விரை புனலோடு ஓய்வாரும் – பரி 10/102

விரும்பத்தக்க படகுகளில் விரைகின்ற ஆற்றுநீரில் ஓய்ந்திருப்போர் சிலர்;

வேம்பின் பைம் காய் என் தோழி தரினே
தேம் பூம் கட்டி என்றனிர் இனியே
பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர்
தைஇ திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய அற்றால் அன்பின் பாலே – குறு 196

வேப்பமரத்தின் பசிய காயை என் தோழி தரும்போது
இனிப்பான நல்ல வெல்லக்கட்டி என்று சொன்னீர்; இப்பொழுதோ,
பாரியின் பறம்பு மலையில் குளிர்ந்த சுனையில் உள்ள தெளிந்த நீரை
தை மாதத்துக் குளிர்போன்று குளிரவைத்ததாகக் கொடுத்தாலும்
இவை வெப்பமுடையன, மேலும் உவர்ப்பன என்று கூறுகின்றீர்;
தலைவனே! அப்படி ஆகிவிட்டது உம் அன்பின் தன்மை.

திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய
வேலினும் வெய்ய கானம் அவன்
கோலினும் தண்ணிய தட மென் தோளே – பட் 299-301

திருமாவளவவன் பகைவரைக் கொல்லுதற்கு உயர்த்தி ஓங்கிய
வேலினும் கொடியவாயிருந்தன, (தலைவியைப் பிரிந்து செல்லும் வழியிலுள்ள)காடு, அவன்
செங்கோலினும் குளிர்ந்தன (தலைவியின்)பெரிய மெல்லிய தோள்கள்.

அற்சிர வெய்ய வெப்ப தண்ணீர் – குறு 277/4

அற்சிரக் காலத்திலே விரும்பத்தக்கதாகிய வெப்பத்தையுடைய நீரை

என் ஐ மார்பில் புண்ணும் வெய்ய – புறம் 280/1

என் தலைவனுடைய மார்பிலுண்டான புண்களும் பெரியவாயுள்ளன

மலை கவின் அழிந்த கனை கடற்று அரும் சுரம்
வெய்ய மன்ற – அகம் 325/10,11

மலையின் அழகு ஒழிந்த செறிந்த காடாகிய பாலை வழிகள்
ஒருதலையாகக் கொடியன

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *