சொல் பொருள்
அஞ்சு, மிரளு
சொல் பொருள் விளக்கம்
அஞ்சு, மிரளு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be scared, get frightened
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெருக்கு விடை அன்ன வெருள் நோக்கு கயம் தலை புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய் வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர் – புறம் 324/1-3 காட்டுப்பூனையின் ஆணைப்போல வெருண்ட பார்வையினையும் பெரிய தலையினையும் பறவைகளின் ஊனைத் தின்பதனால் புலால் நாற்றம் கமழும் மெல்லிய வாயினையுமுடைய வெளுத்த வாயையுடைய வேட்டுவர்களின் தம்மில் ஒருவரையொருவர் விரும்பிநட்புக்கொள்ளும் சிறுவர்கள் ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை கனை விசை கடு வளி எடுத்தலின் துணை செத்து வெருள் ஏறு பயிரும் ஆங்கண் – அகம் 121/12-14 நெறியிலே செல்லும் சாத்தரது சோறு பொதிந்த வெள்ளிய பனையோலையாலான குடையினை மிக்க விசையினையுடைய சூறாவளி தூக்கலின் எழுந்த ஒலியினை தனது பிணையினது குரலென எண்ணி அஞ்சிய மானேறு அப்பிணையை அழைத்திடும் இடங்களையுடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்