சொல் பொருள்
செல்வம், பொருள்திரள், வாழ்வின் ஆதாரப் பொருள், வெறுப்பு,
சொல் பொருள் விளக்கம்
செல்வம், பொருள்திரள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wealth, life-spring, hatred, dislike
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர் – பதி 55/4 நிறைந்த அணிகலன்களாகிய செல்வம் தேங்கியிருக்கும் பண்டகசாலைகள் நிலன் எடுக்கல்லா ஒண் பல் வெறுக்கை பயன் அறவு அறியா வளம் கெழு திரு நகர் – மது 215,216 நிலம் சுமக்கமாட்டாத நல்ல பல பொருள்திரள்களையும் உடைய, பயன் அற்றுப்போதலை அறியாத வளம் நிரம்பிய அரண்மனைகளில் அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை – திரு 263 அந்தணரின் வாழ்வின் ஆதாரப்பொருளே, சான்றோர் புகழும் சொற்களின் ஈட்டமாயிருப்பவனே, பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை – பதி 65/11 பாணர்களின் பாதுகாவலனே! பரிசிலர் வாழ்வின் ஆதாரப்பொருளே! தாது உண் வெறுக்கைய ஆகி இவள் போது அவிழ் முச்சி ஊதும் வண்டே – ஐங் 93/4,5 தேனுண்ணுவதை வெறுத்தனவாகி, இவளின் அரும்பாக இருந்து அப்போதுதான் மலர்ந்த பூக்களுள்ள தலையுச்சியை மொய்க்கின்றன வண்டுக்கூட்டம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்