சொல் பொருள்
வெற்றிலை போடுதல் – உவப்புறுதல்
சொல் பொருள் விளக்கம்
வெற்றிலை மங்கலப் பொருளாகக் கொள்ளப்படுகிறது. வெற்றிலை வைத்து அழைத்தல் திருமண அழைப்பாகும். வெற்றிலை தருதல் உறுதி மொழிதல், அமைதிப்படுதல் ஆயவற்றுக்கும் அடையாளமாம். இம் மங்கலப் பொருளாம் வெற்றிலை உவமைப் பொருளாகவும் வழங்குகின்றது. மகிழ்ச்சியின் அடையாளமாகவும், முழு நிறைவாக உண்ட அடையாளமாகவும் வழக்கில் உள்ளது. இவற்றினும் உயர்ந்து பாலுறவுக் குறிப்பாகவும் ‘வெற்றிலை போட வேண்டும்’ என்பதுள்ளது. சருகு போடுதல் காண்க.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்