சொல் பொருள்
இளமை, குற்றம், வயிரமின்மை
சொல் பொருள் விளக்கம்
இளமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
tenderness, youth, fault, defect, having no hard core
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெளிற்று பனம் துணியின் வீற்று_வீற்று கிடப்ப களிற்று கணம் பொருத கண் அகன் பறந்தலை – புறம் 35/22,23 இளைய பனையினது துண்டம் போல, வேரு வேறு கிடப்ப களிற்றுத்திரளைப் பொருத இடம் அகன்ற போர்க்களத்தின்கண் ஒளிறு வாள் தானை கொற்ற செழியன் வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடு-தொறும் – அகம் 106/10,11 விளங்கும் வாட்படையினையுடைய வெற்றி பொருந்திய பாண்டியன் குற்றம் இல்லாத படைப்பயிற்சியோடு கூடி நெருங்கிய போரில் அடுந்தோறும் இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 312,313 கரிய பனையின் – (உள்ளே)வெளிற்றினையுடைய – புல்லிய செறும்பை ஒத்த கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்