Skip to content

சொல் பொருள்

விரும்பப்படும், வெம்மையையுடைய, கொடிய, மிகுந்த

சொல் பொருள் விளக்கம்

விரும்பப்படும்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

liked, hot, harsh, cruel, very

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வெவ்வெம்செல்வன் விசும்பு படர்ந்து ஆங்கு – பொரு 136

(எல்லோராலும்)விரும்பப்படும் வெம்மையையுடைய ஞாயிறு விண்ணில் (மெல்லச்)சென்றாற் போன்று

ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில் – குறு 58/3

சூரியன் காயும் வெம்மையுடைய பாறையின் ஒரு பக்கத்தில்

வெவ் வாய் பெண்டிர் கௌவை தூற்றினும் – அகம் 50/3

கொடிய பேச்சைக்கொண்ட பெண்டிர் பழிசொல்லித் திரிந்தாலும்

வெயில் அவிர்பு நுடங்கும் வெவ் வெம் களரி – அகம் 293/5

வெய்யில் விளங்கி அசையும் மிக்க வெப்பத்தையுடைய காட்டிடத்தே
– நாட்டார் உரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *