சொல் பொருள்
வேகும் என்பதன் இடைக்குறை, வெந்துபோகும்,
சொல் பொருள் விளக்கம்
வேகும் என்பதன் இடைக்குறை, வெந்துபோகும்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be boiled
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உள்ளின் உள்ளம் வேமே உண்கண் மணி வாழ் பாவை நடை கற்று அன்ன என் அணி இயல் குறு_மகள் ஆடிய மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே – நற் 184/6-9 நினைத்துப்பார்த்தால் நெஞ்சம் கொதிக்கிறது – மையுண்ட கண்களின் மணிகளில் வாழும் பாவையானது வெளியில் வந்து நடக்கக் கற்றுக்கொண்டதைப் போல என் அழகிய சாயலையுடைய சிறுமகள் விளையாடிய நீல மணி போன்ற நொச்சியையும் திண்ணையையும் கண்டு – உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது இருப்பின் எம் அளவைத்து அன்றே – குறு 102/1,2 (பிரிந்து சென்ற தலைவரை) நினைத்தால் உள்ளம் வேகின்றது. நினைக்காமல் இருந்தால் அது என்னால் முடிவது அன்று;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்