சொல் பொருள்
சங்ககால ஊர்
சொல் பொருள் விளக்கம்
வேம்பி என்பது சங்ககாலத்தில் சிறந்து விளங்கிய ஊர்களில் ஒன்று. வேம்பற்றூர் என்னும் பெயரின் மரூஉ ‘வேம்பு’. இந்த வேம்பற்றூர் மதுரை அருகே உள்ளது. இன்று வேம்பத்தூர் என்று அழைக்கப்படுகிறது. இதனை முசுண்டை என்பவன் ஆண்டான். இவன் ஒரு சிறந்த வள்ளல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a city in sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என் நல் எழில் இள நலம் தொலையினும் – அகம் 249/9,10 பல வேற்படையுள்ள முசுண்டை என்பானது வேம்பி என்னும் ஊரைப் போன்ற எனது நல்ல அழகிய இளைமைச் செவ்வி தொலைந்தவழியும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்