சொல் பொருள்
தாவரங்களின் மண்ணின் கீழான பகுதிஉடம்பில் முளைத்தெழும் உறுப்பின் அடிப்பகுதி, வியர்வை
சொல் பொருள் விளக்கம்
தாவரங்களின் மண்ணின் கீழான பகுதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
root, the root bottom of a shoot of a body, sweat, perspiration
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேர் பிணி வெதிரத்து கால் பொரு நரல் இசை – நற் 62/1 வேர்கள் இறுகப் பிணிக்கப்பெற்ற மூங்கில் காற்றினால் மோதப்படும்போது எழும்பும் நரலும் ஓசை அலகை அன்ன வெள் வேர் பீலி கலவ மஞ்ஞை – மலை 234,235 சோழியைப் போன்ற வெண்மையான வேர்களையுடைய மயிலிறகுகளைக்கொண்ட தோகையையுடைய மயில்கள் சோழியைப் போன்ற வெண்மையான வேர்களையுடைய மயிலிறகுகளைக்கொண்ட தோகையையுடைய மயில்கள் வேற்று இழை ஊடுபோன வியர்வையால் நனைந்த சீரையை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்