சொல் பொருள்
ஒரு சங்ககால ஊர்
சொல் பொருள் விளக்கம்
இந்த ஊர் சோழநாட்டைச் சேர்ந்தது என்றும் கள் வளமும், நெல் வளமும் மிக்கது என்றும் ஓர் அகப்பாடல் குறிப்பிடுகிறது. இது இன்றைய வைத்தீஸ்வரன்கோயில் என்பர். இது புள்ளிருக்குவேளூர் என்றும் குறிப்பிடப்படுகிறது. ‘புள்’ என்னும் சொல் கருடனையும், ‘இருக்கு’ என்னும் சொல் ரிக் வேதத்தையும் ‘வேள்’ என்னும் சொல் முருகப்பெருமானையும் குறிக்கும் என்று மு. அருணாசலம் விளக்கம் தருகிறார். இடையன் நெடுங்கீரனார் என்னும் இந்த அகப்பாடல் புலவர் இந்த ஊரிலுள்ள தெய்வம் பொய் சொல்வோர் உயிரைப் பலியாகக் கொள்ளும் என்று குறிப்பிடுகிறார்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a city in sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பழம் பல் நெல்லின் வேளூர் வாயில் – அகம் 166/4 பழைய பலவகை நெற்களையுடைய வேளூரின் வாயிலிடத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்