Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. நீங்கு, விலகு, பெரிதாகு, விரி,
2. (பெ) 1. சட்டி, தகழி,

சொல் பொருள் விளக்கம்

நீங்கு, விலகு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

leave, move away
become wider, larger
a small wide-mouthed earthen pot
almost hemispherical bowl of an oil lamp
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆள்வினைக்கு அகல்வாம் எனினும் மீள்வாம் எனினும் நீ துணிந்ததுவே - நற் 103/10,11

மேற்கொண்ட பொருளீட்டும் செயலுக்காக மேலும் செல்வோம் என்றாலும், மீளவும் வீட்டுக்குத் திரும்புவோம் என்றாலும் நீ முடிவெடு

புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர் – மலை 412

வருத்தம் வெகுதூரம் போய்விட(முற்றிலும் நீங்க), புத்துணர்வுபெற்றவர் ஆவீர்

இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த – திரு 72

கரிய சேற்றினையுடைய அகன்ற வயலில் முறுக்கவிழ்ந்து மேற்புறமும் மலர்ந்த

அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி – பெரும் 1

அகன்ற பெரிய வானில் பரந்த இருளை விழுங்கி

அறுமீன் சேரும் அகல் இருள் நடுநாள் – அகம் 141/8

கார்த்திகையைச் சேரும் இருள் விரிந்த நடு இரவில்

கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் – பெரும் 377,378

கரிய வட்டிலில் அப்ப வாணிகர் பாகுடன் பிடித்த
நூல் போலச் சூழ்ந்துகிடக்கின்ற அப்பம்

யவனர் இயற்றிய வினை மாண் பாவை
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து
பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி – நெடு 101-103

யவனர் செய்த தொழில் திறத்தில் உயர்ந்த பெண்சிலையின்
கைகளில் ஏந்தியிருக்கின்ற வியப்பைத்தரும் அழகுடைய தகழி நிறைய நெய் சொரிந்து,
பருத்த திரிகளைக் கொளுத்தி, (செந்)நிறமான தழல் மேல்நோக்கி எரிகின்ற சுடரை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *