சொல் பொருள்
அழைத்துப் பாடுவோர். அகவல் – அழைத்தல். குலத்தோர் எல்லோரையும் அழைத்துப்பாடுவோர்.
(பெ) – 1. ஒரு நாட்டு/ஊர் மக்கள், 2. பாடல் பாடுவோர்,
சொல் பொருள் விளக்கம்
1. ஒரு நாட்டு/ஊர் மக்கள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
people of a country/city
bards
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கானவர் மருதம் பாட அகவர் நீல் நிற முல்லை பல் திணை நுவல – பொரு 220,221 முல்லைநிலத்துக் கானவர் மருதப்பண்னைப் பாடவும், மருத நிலத்து உழவர் நீல நிறமுடைய முல்லைக்கொடி படர்ந்த பலவாலிய காட்டுநிலத்தைக் கொண்டாடவும் அகவர் : அழைத்துப் பாடுவோர். அகவல் - அழைத்தல். குலத்தோர் எல்லோரையும் அழைத்துப்பாடுவோர். (மதுரைக் காஞ்சி. 223. நச்.) நாள் ஈண்டிய நல் அகவர்க்கு தேரொடு மா சிதறி – மது 223,224 விடியற்காலத்தே வந்த நல்ல பாடகர்களுக்குத் தேருடனே, குதிரைகளையும் கொடுத்து இந்தப் பாடகர்கள் பொருநர் என்றும் சூதர் என்றும் அழைக்கப்படுவர். இவர்கள் பொதுவாக அரசர் முன்னிலையில் பாடிப் பரிசில் பெறுவோர். இவரில் போர்க்களப் பொருநர், ஏர்க்களப் பொருநர் என இருவகையுண்டு. இவரில், பாடல்பாடும் மகளிர், அகவன்மகளிர் எனப்படுவர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்