Skip to content
மருதம்

மருதம் என்ற ஒரு வகை மரம்.

1. சொல் பொருள்

(பெ) 1. மருதம், அகத்திணைப்பகுப்புளுள் ஒன்று, 2. மருத நிலத்திற்குரிய நிலம் – வயலும் வயல் சார்ந்த இடம், 3. மருத நிலப்பண், 4. மருது என்ற ஒரு வகை மரம்/பூ,  நீர் மருது அல்லது வெண்மருது , கருமருது, பூ மருது, பிள்ளைமருது

2. சொல் பொருள் விளக்கம்

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகைத் அகத்திணைப்பகுப்புளுள் ஒன்று,

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

one of the five love-modes of human life, agricultural tract, wet land, A morning melody-type peculiar to agricultural tracts; a kind of tree/ its flower; (Arjuna., Terminalia arjuna), (Black winged myrobalan,), (Flowering murdah.), (terminalia paniculatta)

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

உழிஞை-தானே மருதத்து புறனே - பொருள். புறத்:9/1

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என - பொருள். அகத்:5/5

வைகுறு விடியல் மருதம் எற்பாடு - பொருள். அகத்:8/1

மருதம் சான்ற மருத தண் பணை – சிறு 186

மருதத்திணை ஒழுக்கம் நிலைபெறுவதற்கமைந்த மருத நிலத்தில் குளிர்ந்த வயலினையுடையதும்

குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும் பூ கண்ணி குறவர் சூட
கானவர் மருதம் பாட அகவர்
நீல் நிற முல்லை பல் திணை நுவல – பொரு 218-221

குறிஞ்சிப்பண்ணைப் பரதவர் பாடவும், நெய்தலாகிய
நறிய பூவால் புனைந்த கண்ணியைக் குறவர்கள் சூடவும்,
முல்லை நிலத்து மக்கள் மருதப்பண்ணைப் பாட, உழவர்கள்
நீல நிறமுடைய முல்லைக்கொடி படர்ந்த பலவாகிய காட்டுநிலத்தைக் கொண்டாடவும்

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
பழன பல் புள் இரிய கழனி
வாங்கு சினை மருத தூங்கு துணர் உதிரும்
தேர் வண் விராஅன் இருப்பை – நற் 350/104

வெண்ணெல் கதிர்களை அறுப்பவர்களின் தண்ணுமைப் பறையின் ஒலிக்கு வெருண்டு
பழனத்தில் உள்ள பலவான பறவைகள் பறந்தோட, வயல்வெளியில்
வளைந்த கிளைகளைக் கொண்ட மருதமரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் பூங்கொத்துக்கள் உதிர்கின்ற
தேர்க்கொடை கொடுப்பதில் சிறந்த விரான் என்பானின் இருப்பையூர்

இந்த மருதமரங்கள் நீண்ட நாள் வாழக்கூடியவை. நீர்நிலைகளை ஒட்டி நன்கு வளரும்

முடம் முதிர் மருதத்து பெரும் துறை – ஐங் 31/3

தொல் நிலை மருதத்து பெரும் துறை – ஐங் 75/3

துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு – புறம் 344/3

இதன் பூவில் நுனியில் முடிபோன்ற அமைப்புகள் இருக்கும்.

உளை பூ மருதத்து கிளை குருகு இருக்கும் – ஐங் 7/4

மேலே மயிர் போன்ற நார்முடியைக் கொண்ட பூவினையுடைய மருதமரத்தில் தம் இனத்துடன் பறவைகள்
இருக்கும்

கானவர் மருதம் பாட அகவர் - பொரு 220

மருதம் சான்ற மருத தண் பணை - சிறு 186

மருதம் சான்ற தண் பணை சுற்றி - மது 270

யாழோர் மருதம் பண்ண காழோர் - மது 658

குருகிலை மருதம் விரி பூ கோங்கம் - குறி 73

மருதம் பண்ணி அசையினிர் கழி-மின் - மலை 470

மருதம் பண்ணிய கரும் கோட்டு சீறியாழ் - மலை 534

கரை சேர் மருதம் ஏறி - ஐங் 74/3

துறை நணி மருதம் ஏறி தெறும்-மார் - பதி 27/6

தேம் பாய் மருதம் முதல் பட கொன்று - பதி 30/16

மருதம் சான்ற மலர் தலை விளை வயல் - பதி 73/7

மருதம் நளி மணல் ஞெமர்ந்த - பரி 8/94

தெரி மருதம் பாடுப பிணி கொள் யாழ் பாணர் - பரி 24/73

தாழ் சினை மருதம் தகைபெற கவினிய - அகம் 366/1

மாலை மருதம் பண்ணி காலை - புறம் 149/2

உறியொடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி - பால:1 15/2

மத மழை யானை என்ன மருதம் சென்று அடைந்தது அன்றே - பால:1 16/4

புல்லிய நெய்தல் தன்னை பொருஅரு மருதம் ஆக்கி - பால:1 17/2

வண்டுகள் இனிது பாட மருதம் வீற்றிருக்கும் மாதோ - பால:2 4/4

விரியும் வார் புனல் மருதம் சூழ் மிதிலையர் கோமகன் - பால:8 48/3

வன் தெறு பாலையை மருதம் ஆம் என - அயோ:14 24/1

முல்லையை குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆக்கி - பால:1 17/1

பரந்த தீம் புனல் மருதம் பற்று விட்டு இன மயில் அகவும் - சிந்தா:7 1557/3

தடம் சிறை அன்னம் குருகொடு நாரை பார்ப்பு இனம் ஓம்பு தண் மருதம்
மடங்கல் போல் திறலார் மா மணி கறங்க வள வயல் புள் எழ கழிந்தார் - சிந்தா:10 2102/3,4

பாலை போய் மருதம் பயந்திட்டதே - சிந்தா:10 2170/4

சேடல் நெய்தல் பூளை மருதம்
கூட முடித்த சென்னியன் நீடு ஒளி - மது: 22/69,70

அகநிலை மருதமும் புறநிலை மருதமும் - புகார்:8/39

அகநிலை மருதமும் புறநிலை மருதமும்
அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் - புகார்: 8/39,40

அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் - புகார்:8/40

அருகியல் மருதமும் பெருகியல் மருதமும்
நால் வகை சாதியும் நலம் பெற நோக்கி - புகார்: 8/40,41

மரவமும் நாகமும் திலகமும் மருதமும்
சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் - மது: 13/152,153

செல்வ மருதத்து ஒல்லையுள் இருந்த - உஞ்ஞை:49/19

மருதம் தழீஇய மல்லல் அம் பெரு வழி - உஞ்ஞை:48/170

மன்று அயல் பரக்கும் மருதம் தழீஇ - மகத:2/25

மாலையில் பயிலும் வானமீன் கொடி போல் வாவியில் குளிக்கும் மா மருதம் - வில்லி:6 19/4

வச்சிரம் போல்பவர் மருதம் நீங்கினார் - வில்லி:11 92/4

மல்கு நீர் பண்ணை மருதமும் கடந்து வன்னியில் பிறந்த மா மயிலும் - வில்லி:19 6/2

விரவி நின்ற மா மருதினூடு தாம் மெத்தென தவழ்ந்தருளி மீளவும் - வில்லி:35 1/3

வேறு அரையரை போல் பெரு வளம் கவர்ந்து மருதத்தில் பரந்தன வெள்ளம் - சீறா:34/4

மடை செறி தடங்கள் சூழ்ந்த மருதம் விட்டு அகன்று போனார் - சீறா:3381/4

வார்ந்து நீண்டு எழுந்து இ வனம் கடந்து அணி மருதம்
சார்ந்த பல் வள மதீன மா நகரத்தில் சார்ந்தார் - சீறா:4281/3,4

ஆறு எழுந்து ஓடி பாலையை புரட்டி அழகுறு மருதம்-அது ஆக்க - சீறா:697/1

அரும்பு வாய் ஒழுகும் பசு நறும் தேறல் அகல் பணை மருதமும் நீந்தி - சீறா:4452/1

மந்தரை கமுகு புன்னை நாரத்தை மகிழ் விளா மருது எலுமிச்சை - சீறா:1002/3

தமிழ் காழி மருத வன மறைக்காடு திரு மருகல் தனுக்கோடி வரு குழகர் தரு வாழ்வே - திருப்:121/6

மருத அரசர் படை விடுதி வீடாக நாடி மிக மழம் விடையின் மிசையி வரு சோமீசர் கோயில்தனில் - திருப்:870/15

சதுரன் வரையை எடுத்த நிருதன் உடலை வளைத்து சகடு மருதம் உதைத்த தகவோடே - திருப்:186/5

ஏலம் இலவங்க வர்க்க நாகம் வகுளம் படப்பை பூகம் மருதம் தழைத்த கர வீரம் - திருப்:219/5

மருதம் உதைந்த முகுந்தன் அன்புறு மருக குவிந்து மலர்ந்த பங்கய - திருப்:576/13

அகிலும் மருதமும் முகளித வகுளமும் அமுத கதலியும் அருணமும் வருடையும் - திருப்:370/13

வருடை இனம் அது முருடு படும் அகில் மரமும் மருதமும் அடி சாய - திருப்:613/5

மருத பொழில் அணி மாலிருஞ்சோலை மலை-தன்னை - நாலாயி:348/1

இரு மா மருதம் இறுத்த இ பிள்ளை - நாலாயி:32/2

ஒத்த இணை மருதம் உன்னிய வந்தவரை ஊரு கரத்தினொடும் உந்திய வெம் திறலோய் - நாலாயி:68/2

அற்றவன் மருதம் முறிய நடை - நாலாயி:539/1

போய் தீர்த்தம் ஆடாதே நின்ற புணர் மருதம்
சாய்த்து ஈர்த்தான் கைத்தலத்தே ஏறி குடிகொண்டு - நாலாயி:572/1,2

போர் ஆனை கொம்பு ஒசித்த போர் ஏற்றினை புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை - நாலாயி:1088/3

இரும் கை மா கரி முனிந்து பரியை கீறி இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து - நாலாயி:1144/1

மா வாய் பிளந்து மல் அடர்த்து மருதம் சாய்த்த மாலது இடம் - நாலாயி:1350/2

நடையால் நின்ற மருதம் சாய்த்த நாதன் ஊர் - நாலாயி:1492/2

புணர் மருதம் இற நடந்தாற்கு இழந்தேன் என் பொன் வளையே - நாலாயி:1671/4

அவனே அணி மருதம் சாய்த்தான் அவனே - நாலாயி:2332/2

பெற்றம் பிணை மருதம் பேய் முலை மா சகடம் - நாலாயி:2341/1

மொய் வரை உலகம் போலும் முளரி நீர் மருத வைப்பு - 1.திருமலை:2 25/4

மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்து - 2.தில்லை:3 1/2

வண்டு அறை பூம் சோலை வயல் மருத தண் பணை சூழ்ந்து - 3.இலை:2 1/3

வளைந்த மா மதி போன்று உள மருத நீர் வைப்பு - 4.மும்மை:5 26/4

மா மருங்கு தண் நீழலின் மருத யாழ் முரலும் - 4.மும்மை:5 33/3

தண் நித்தில நீர் மருத தண்டலை சூழ் குலையின் சார்பினிலும் - 4.மும்மை:6 27/2

வாவி தட மலர் வதனம் பொலிவுறு மருத தண் பணை வழி வந்தார் - 5.திருநின்ற:1 157/4

நெருங்கி வளர் கமுகு உடுத்த நிறை மருத வழி சென்றார் - 6.வம்பறா:1 625/4

செஞ்சாலி வயல் மருத திருவாரூர் சென்று அடைந்தார் - 6.வம்பறா:2 123/4

மழைத்த மந்த மருதத்தினால் நறு மலர் வண்ண நுண் துகள் தூவி - 6.வம்பறா:1 150/3

இடம் படு பண்ணை-தோறும் எழுவன மருதம் பாடல் - 3.இலை:4 3/2

வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன மருதம்
நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல் - 4.மும்மை:5 6/3,4

மழலை மென் கிளி மருது அமர் சேக்கைய மருதம்
நிழல் செய் கைதை சூழ் நெய்தல் அம் கழியன நெய்தல் - 4.மும்மை:5 10/3,4

வாச மென் மலர் மல்கிய முல்லை சூழ் மருதம்
வீசு தெண் திரை நதி பல மிக்கு உயர்ந்து ஓடி - 4.மும்மை:5 20/1,2

பொருவு_இல் கோயிலும் சூழ்ந்தது அ புறம்பணை மருதம் - 4.மும்மை:5 31/4

மருங்கு சூழ் தவம் புரிந்தது அன்றோ மற்ற மருதம் - 4.மும்மை:5 32/4

பண் காஞ்சி இசை பாடும் பழன வேலி பணை மருதம் புடை உடைத்தாய் பாரில் நீடும் - 4.மும்மை:5 86/2

நெருங்கிய சாதுரங்க பலம் நிகர்பனவாம் நிறை மருதம் - 5.திருநின்ற:1 6/4

வண்டு அறை பூம் புறவு மலை வளம் மருதம் பல கடந்தே - 6.வம்பறா:2 172/3

நீளும் நெய்தலும் மருதமும் கலந்து உள நிலங்கள் - 4.மும்மை:5 46/4

மருத வானவர் வழிபடும் மலரடி வணங்குதல் செய்வோமே - தேவா-சம்:2664/4

பாடு உடை பூதம் சூழ பரமனார் மருத வைப்பில் - தேவா-அப்:344/2

மருதங்களா மொழிவர் மங்கையோடு வானவரும் மால் அயனும் கூடி தங்கள் - தேவா-அப்:2442/1

இட்டத்தால் அத்தம்தான் இது அன்று அது என்று நின்றவர்க்கு ஏயாமே வாய் ஏது சொல் இலை மலி மருதம் பூ - தேவா-சம்:1368/2

செரு மருதம் துவர் தேர் அமண் ஆதர்கள் - தேவா-சம்:3072/1

மாடு மா கோங்கமே மருதமே பொருது மலை என குலைகளை மறிக்கும் ஆறு உந்தி - தேவா-சுந்:752/2
மருதம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *