Skip to content
குறிஞ்சி

குறிஞ்சி என்பது மலையில் வளரும் ஒரு செடியாகும்

1. சொல் பொருள்

(பெ) 1. ஒரு பண், 2. ஐவகை நிலங்களுள் ஒன்று, மலையும் மலைசார்ந்த இடமும், 3. ஒரு செடி/பூ, நீலக்குறிஞ்சி, கல்குறிஞ்சி, செறுகுறிஞ்சி, நெடுங்குறிஞ்சி, இடக்குறிஞ்சி, கருங்காற்குறிஞ்சி

மூங்கில் பிளாச்சு தப்பை ஆயவற்றால் பெரும்பாலும் இருக்கை செய்யப்பட்டமையால், அம்மூங்கில் தோன்றிய குறிஞ்சி நிலத்தின் வழியாக ஏற்பட்ட பெயர் ஆகும்.

2. சொல் பொருள் விளக்கம்

குறிஞ்சிப்பூ
குறிஞ்சிப்பூ

குறிஞ்சிச் செடிகள் புதர்வகையைச் சேர்ந்தவை. இச்செடி, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே பூக்கும். இதில் பூத்துக் குலுங்கும் நீல மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில்  இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது

நீலமலையில் குறிஞ்சிச்செடி பூப்பு சுழற்சியை வைத்து நீலகிரியில் உள்ள தோடர் இன ஆதிவாசி மக்கள் தங்களது வயதை கணக்கிட்டுள்ளனர். எத்தனை முறை குறிஞ்சிப்பூ பூத்ததைப் பார்த்தார்கள் என்பதைக் கொண்டு மேற்குத் தொடர்ச்சி மலைவாழ் பளியர் பழங்குடியினர் தங்கள் வயதை கணிப்பார்கள்.

பொதுவாக, குறிஞ்சிச் செடிகளில் 3 மாதங்கள், ஒரு ஆண்டு, 3 ஆண்டு, 6 ஆண்டு, 12 ஆண்டு, 30 ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் வகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் மே மாதத்தில் மலர் வழிபாடு நடைபெறும். குறிஞ்சி ஆண்டவர் கோயில் நடையில் குறிஞ்சி செடிகள் உள்ளன. 

அமர்வு இருக்கையாகிய நாற்காலியைக் குறிச்சி என்பது பொதுவழக்காகும். குறிஞ்சியில் இருந்து வந்த பெயரீடு இது. குறிச்சி புக்கமான் என்பது இலக்கிய ஆட்சி. குறிச்சி வேட்டுவர் குடியிருப்பு. மூங்கில் பிளாச்சு தப்பை ஆயவற்றால் பெரும்பாலும் இருக்கை செய்யப்பட்டமையால், அம்மூங்கில் தோன்றிய குறிஞ்சி நிலத்தின் வழியாக ஏற்பட்ட பெயர் ஆகும். குறி, குறம், குறவஞ்சி என்பவை கருதுக. மதம் கொண்ட யானையையும் மயக்கும் பண் குறிஞ்சிப்பண் என்பது அகப்பாடல். குறிஞ்சியைக் குறிச்சி என்பதும் உண்டு. குறிச்சிப் பெயர் ஊர்கள் பல; பாஞ்சாலங் குறிச்சி, கல்லிடைக் குறிச்சி.

குறிஞ்சி
குறிஞ்சிப்பூ

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

A specific melody-type, Hilly tract, Strobilanthes kunthiana, strobilanthes kunthianus, Strobilanthes nilgiriensis

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என - பொருள். அகத்:5/5

காரும் மாலையும் முல்லை குறிஞ்சி - பொருள். அகத்:6/1
கூதிர் யாமம் என்மனார் புலவர் -    6/2

வெட்சி-தானே குறிஞ்சியது புறனே - பொருள். புறத்:1/3
நறும் புகை எடுத்து குறிஞ்சி பாடி – திரு 239

நறிய மணப்புகை கொடுத்து, குறிஞ்சிப்பண்ணைப் பாடி

விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ – திரு 267

விண்ணைத் தீண்டும் நெடிய மலைகளையுடைய குறிஞ்சிநிலத்திற்கு உரிமையுடையோனே,

தண் கய குவளை குறிஞ்சி வெட்சி – குறி 63

குளிர்ந்த குளத்து(ப்பூத்த) செங்கழுநீர்ப்பூ, குறிஞ்சி, வெட்சி

கரும் கோல் குறிஞ்சி பூ கொண்டு
பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே – குறு 3/3,4

கரிய கொம்புகளை உடைய குறிஞ்சிச் செடியின் மலர்களினின்றும் எடுத்து
பெரிய (அளவு) தேனை (தேனீக்கள்) செய்யும் நாட்டைச் சேர்ந்தவனோடு யான் கொண்ட காதல்

மலரே! குறிஞ்சி மலரே! திரைப்படம்: டாக்டர் சிவா; வெளியிடப்பட்டது: 1975.
குறிஞ்சிச்செடி
குறிஞ்சிச்செடி
நறு மலர் குறிஞ்சி நாள் மலர் வேய்ந்து - மது:14/89

குறிஞ்சி பாடு-மின் நறும் புகை எடு-மின் - வஞ்சி:24/18

குறத்தியர் பாடிய குறிஞ்சி பாணியும் - வஞ்சி:27/224

அம் தீம் குறிஞ்சி அகவல் மகளிரின் - வஞ்சி:28/35

கொய் தளிர் குறிஞ்சி கோமான் தன் முன் - வஞ்சி:30/46

முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து - மது:11/64

குறிஞ்சி எல்லையின் நீங்கி கொடி முல்லை மகள் மகிழ்ந்து ஆட - சிந்தா:7 1563/1

குறிஞ்சி பூம் கோதை போலும் குங்கும முலையினாள் தன் - சிந்தா:7 1568/1

இழை வளர் முலையார் சாயல் போல் தோகை இறை கொள் பூம் குறிஞ்சியும் இறந்தார் - சிந்தா:10 2105/4
குறிஞ்சிச்செடி
குறிஞ்சிச்செடி
வள் இதழ் குளவியும் குறிஞ்சியும் குழைய - மலை 334

நறும் புகை எடுத்து குறிஞ்சி பாடி - திரு 239

விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ - திரு 267

குறிஞ்சி பரதவர் பாட நெய்தல் - பொரு 218

குறிஞ்சி கோமான் கொய் தளிர் கண்ணி - சிறு 267

வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி/பல்கால்பறவை கிளை செத்து ஓர்க்கும் - பெரும் 182,183

கரும் கால் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து - மது 300

கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின் - மது 613

தண் கய குவளை குறிஞ்சி வெட்சி - குறி 63

நறும் கார் அடுக்கத்து குறிஞ்சி பாடி - மலை 359

குறிஞ்சி நல் ஊர் பெண்டிர் - நற் 116/11

உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி - நற் 255/2

கரும் கால் குறிஞ்சி மதன் இல் வான் பூ - நற் 268/3

நீள் மலை கலித்த பெரும் கோல் குறிஞ்சி/நாள்மலர் புரையும் மேனி பெரும் சுனை - நற் 301/1,2

கரும் கோல் குறிஞ்சி பூ கொண்டு - குறு 3/3

குறிஞ்சி குன்றவர் மறம் கெழு வள்ளி தமர் - பரி 9/67

பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாட - அகம் 102/6

கரும் கோல் குறிஞ்சி நும் உறைவு இன் ஊர்க்கே - அகம் 308/16

கரும் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட - புறம் 374/8

நறும் புகை எடுத்து குறிஞ்சி பாடி - திரு 239

விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ - திரு 267
குறிஞ்சி
குறிஞ்சி
வீமமே பறவை தேர் மேல் விளை தவ குறிஞ்சி ஞான - தேம்பா:30 79/2

முல்லையை குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆக்கி - பால:1 17/1

குனிந்த ஊசலில் கொடிச்சியர் எடுத்த இன் குறிஞ்சி
கனிந்த பாடல் கேட்டு அசுணமா வருவன காணாய் - அயோ:10 24/3,4

நெய்தல் வேலி குறிஞ்சி நிகர்த்ததால் - யுத்1:8 27/4

ஓதிய குறிஞ்சி முதலாய நிலன் உள்ள - யுத்1:9 7/1
தீதுறும் கொடும் பாலையும் குறிஞ்சியும் சேர்ந்த - சீறா:447/3

கொன்றையும் குருந்தும் கார் கோல் குறிஞ்சியும் வேயும் தெற்றி - சீறா:2054/1

பொதுவர் முல்லையும் குறிஞ்சியும் கடந்து அயல் போனார் - சீறா:2702/4

கோங்கு அசோகு தேக்கு ஆசினி பாடலம் குறிஞ்சி
  நாங்கு கார் அகில் குங்குமம் இலவு நாரத்தை - சீறா:26/2,3

இத்தகை குறிஞ்சி நிலத்தினை கடந்தே எரி தழல் பாலையில் புகுந்து - சீறா:33/1

குறவரை குறிஞ்சி விட்டு ஈழ்த்து பாலையின் - சீறா:734/1

நிரைநிரை செறிந்து தோன்றும் நெடு முடி குறிஞ்சி சார்ந்தார் - சீறா:1720/4

நெடு வரை குறிஞ்சி நீந்தி நிரை தொறு புகுத சேர்த்தி - சீறா:1723/1

குறிஞ்சி பெரும் திணை குலாஅய் கிடந்த - உஞ்ஞை:50/59

கொய் பூம் குறிஞ்சி கொழு நிலம் கைவிட்டு - உஞ்ஞை:51/2

கோல குறிஞ்சி குரவை ஆடியும் - இலாவாண:12/135

சிறந்த சீர்த்தி குறிஞ்சி கோலி - மகத:2/36

கொய்ம் மலர் காவில் குறிஞ்சி முதலா - மகத:14/282

கரும் கோல் குறிஞ்சியும் கடி நாள் வேங்கையும் - உஞ்ஞை:50/26

குளவியும் குறிஞ்சியும் வளவிய மௌவலும் - இலாவாண:12/28
குறிஞ்சிச்செடி
குறிஞ்சிச்செடி
கருகு குழல் மடவார் கடி குறிஞ்சி அது பாடி - தேவா-சம்:128/3

குருளை எய்திய மடவார் நிற்பவே குறிஞ்சியை பறித்து - தேவா-சம்:2505/1

வெறி கொண்ட முல்லை பிணை மீது குறிஞ்சி வெட்சி - 3.இலை:3 57/3

குறவர் பல் மணி அரித்து இதை விதைப்பன குறிஞ்சி
   கறவை ஆன் நிரை மான் உடன் பயில்வன கானம் - 4.மும்மை:5 7/1,2

குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி - 4.மும்மை:5 10/1

குழல் செய் வண்டு இனம் குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி
   முழவு கார் கொள முல்லைகள் முகைப்பன முல்லை - 4.மும்மை:5 10/1,2

மல்கும் அ பெரு நிலங்களில் வரை புணர் குறிஞ்சி
   எல்லை எங்கணும் இறவுளர் ஏனல் முன் விளைக்கும் - 4.மும்மை:5 11/1,2

கூறு மேன்மையின் மிக்க தம் நாட்டு வண் குறிஞ்சி - 4.மும்மை:5 13/4

கொம்பர் வண்டு சூழ் குறிஞ்சி செய் தவம் குறை உளதோ - 4.மும்மை:5 14/4

கோல முல்லையும் குறிஞ்சியும் அடுத்த சில் இடங்கள் - 4.மும்மை:5 15/1

நீடு நெய்தலும் குறிஞ்சியும் புணர் நிலம் பலவால் - 4.மும்மை:5 41/3

இணைந்து முல்லையும் குறிஞ்சியும் கலப்பன எங்கும் - 4.மும்மை:5 43/4

அலை புனல் பணை குறிஞ்சியோடு அனைவன அனேகம் - 4.மும்மை:5 42/4

கோவலர் கோவிந்தனை குறமாதர்கள் பண் குறிஞ்சி
  பா ஒலி பாடி நடம் பயில் மாலிருஞ்சோலை அதே - நாலாயி:352/3,4

குறவர் மாதர்களோடு வண்டு குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து - நாலாயி:1049/3

குறிஞ்சி பாடும் கூடலூரே - நாலாயி:1359/4

சீர் ஆர் செழும் புழுதி காப்பிட்டு செம் குறிஞ்சி - நாலாயி:2679/3

மல்லிகை கமழ் தென்றல் ஈரும் ஆலோ வண் குறிஞ்சி இசை தவரும் ஆலோ - நாலாயி:3869/1

விண்டு அலர் தூளி வேய் வளர் புறவில் விரை மலர் குறிஞ்சியின் நறும் தேன் - நாலாயி:1819/3

கார் மலி வேங்கை கோங்கு அலர் புறவில் கடி மலர் குறிஞ்சியின் நறும் தேன் - நாலாயி:1821/3

திரிசிரா மலை மேல் உறை வீர குறிஞ்சி வாழும் - திருப்:305/12

கோதை பொன் குறிஞ்சி மாது கச்சு அணிந்த கோமள குரும்பை புணர்வோனே - திருப்:431/7

அலங்கல் என வெண் கடம்பு புனைந்து புணரும் குறிஞ்சி அணங்கை மணம் முன் புணர்ந்த பெருமாளே - திருப்:1167/8

கொந்தின் கடம்பு செம் தண் புயங்கள் கொண்டு அம் குறிஞ்சி உறைவோனே - திருப்:1238/5

அழகா நகம் பொலியும் மயிலா குறிஞ்சி மகிழ் அயிலா புகழ்ந்தவர்கள் பெருமாளே - திருப்:1241/8

விலங்கல் குறிஞ்சி உறை தொங்கல் கடம்ப அருள்தருவாயே - திருப்:1305/4

செந்தினையின் புனம் ஏர் குறிஞ்சியில் வாழும் இளம் கொடியாள் பதங்களில் - திருப்:456/22

அம்புயம் அம் தண் அரம்பை குறிஞ்சியின் மங்கை அம் குடில் மங்கையோடு - திருப்:85/15

அழகு சோபித அம் கொளும் ஆனன விபுதை மோகி குறிஞ்சியின் வாழ் வளி - திருப்:474/15

திகழ் குறிஞ்சியின் மாது மால் மருவு புகழ் பெருமாளே - திருப்:520/16

மார சரம் பட மோகமுடன் குற வாணர் குறிஞ்சியின் மிசையே போய் - திருப்:1262/7

வீற மோதின மறவா குறவர் குறிஞ்சியூடே - திருப்:736/12

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *