சொல் பொருள்
(பெ) கடை, கடைத்தெரு,
சொல் பொருள் விளக்கம்
கடை, கடைத்தெரு,
இந்த அங்காடி இருவகைப்படும்.
பகலில் திறந்திருக்கும் கடைத்தெரு நாளங்காடி என்றும்
இரவில் திறக்கும் கடைத்தெரு அல்லங்காடி என்றும் அழைக்கப்பட்டன.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
market, market place
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நாளங்காடி நனம் தலை கம்பலை – மது 430 நாளங்காடியையுடைய அகன்ற இடத்தே எழுந்த பெரிய ஆரவாரம் அல்லங்காடி அழிதரு கம்பலை – மது 544 அந்திக்காலத்துக் கடைத்தெருவில் மிகுதியைத் தரும் ஆரவாரம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்