Skip to content
அஞ்சனம்

அஞ்சனம் என்பதன் பொருள்மை, கண்ணுக்கு இடும் மை.

1. சொல் பொருள் விளக்கம்

(பெ) 1. மை, 2. கண்ணுக்கு இடும் மை, கண் இமை அல்லது கண்களுக்கு கீழே போடப்படும் ஒப்பனைப் பொருள்

தாது நஞ்சு வகை, சலவைக் கல், அவுரி, கரியாற்சித்திரம் வரையப் பட்ட படத்துணி = அஞ்சனப்படம். எண்திசை யானைகளுள், மேற்றிசை யானை

காணுதல் அல்லது அறிந்துகொள்ளும் என்று பொருள். இதில் இரண்டு வகை உண்டு. 1. பரவைஅஞ்சனம், 2. பாதாள ஆஞ்சனம் பரவைஅஞ்சனம் கொண்டு உலகத்தில் உள்ள பொருட்களையும்,  பாதாளஅஞ்சனம் கொண்டு பூமிக்கு உள் உள்ளவற்றையும் காண முடியும் என மாந்த்ரீக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

மொழிபெயர்ப்புகள்

2.ஆங்கிலம்

black ink, Collyrium, black pigment for the eyelashes

  1. a mineral poison
  2. eyeliner
  3. marble
  4. indigo
  5. cloth on which a figure is drawn with charcoal
  6. elephant
  7. A black coloured or magic ointment put on the hand, &c. to assist in discovering lost, stolen, or concealed property

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

செறி இலை காயா அஞ்சனம் மலர – முல் 93

நெருங்கின இலையினையுடைய காயா அஞ்சனம்(போல்) மலர
– அஞ்சனம் – மை.

ஓங்கு பூ வேழத்து தூம்பு உடை திரள் கால்
சிறு தொழுமகளிர் அஞ்சனம் பெய்யும் – ஐங் 16/1,2

ஓங்கி உயர்ந்து நிற்கும் பூவையுடைய கொறுக்கச்சியின் உள்துளையையுடைய திரண்ட தண்டினில்
சிறுமியரான ஏவல் மகளிர் கண்மையையை இட்டுவைத்திருக்கும்

செம் கயல் நெடும் கண் அஞ்சனம் மறப்ப - சிலப்.புகார் 4/53

செம் கயல் நெடும் கண் அஞ்சனம் தீட்டி - சிலப்.மது 15/132

அஞ்சனம் சேரா செம் கயல் நெடும் கணும் - மணி 18/161

கண் இயல் அஞ்சனம் தோய்ந்த போல் காயாவும் - கார்40:8/3

அஞ்சனம் காயா மலர குருகிலை - திணை50:21/1

அஞ்சன உருவன் தந்து நிறுத்து ஆங்கு - புறம் 174/5

அஞ்சன குன்று ஏய்க்கும் யானை அமர் உழக்கி - கள40:7/1

4. பயன்பாடு

நித்தியின் ‘ஞான அஞ்சனம்’ – வலைக்குள் விழவைக்கும் வசிய மை

பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *