சொல் பொருள்
(பெ) இலை, கீரை
சொல் பொருள் விளக்கம்
இலை, கீரை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
edible leaves, greens
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறு நறு முஞ்ஞை கொழும் கண் குற்று அடகு புன்_புல வரகின் சொன்றியொடு பெறூஉம் – புறம் 197/11,12 குறிய நாற்றத்தினையுடைய முன்னைக்கீரையின் கொழுவிய கண்ணில் கிளைக்கப்பட்ட குறிய இலையை புல்லிய நிலத்தில் விளைந்த வரகினது சோற்றுடனே பெறுகின்ற மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும் அமிர்து இயன்று அன்ன தீம் சேற்று கடிகையும் – மது 531,532 மெல்லிய சுருள் விரிந்த சிறிய கொழுந்துகளையுடைய கீரைகளையும், அமிழ்தினால் செய்தது போன்ற இனிய சாற்றையுடைய கற்கண்டுத்துண்டுகளையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்