சொல் பொருள்

அடித்தல் – கிடைத்தல், உண்ணல், வெதுப்பல், அசைத்தல்

சொல் பொருள் விளக்கம்

அடித்தல் என்பது அடித்தலாம் வினையைக் குறியாமல் பரிசு அடித்தது என்பதில் கிடைத்தல் பொருளில் வருகிறது. “வயிறு நிறைய அடித்து விட்டேன்” என்பதில் உண்ணற் பொருள் அடித்தலுக்கு உண்டாகின்றது. ‘காய்ச்சி அடித்தல் போன்றனவற்றில் அடியாத அடி அடியாகின்றது. அங்கு வெயிலடித்தல் போல் வெப்பப் பொருள் தந்தது. வயிற்றில் அடித்தல் என்பதிலோ பட்டுணி போடுதலைக் குறிப்ப தாயிற்று. எதில் அடித்தாலும் வயிற்றிலடித்தலாகாது. கண்ணடித்தலோ அசைத்தல் பொருளது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.