Skip to content
அடும்பு

அடும்பு என்பது அடப்பங்கொடி

1. சொல் பொருள்

(பெ) அடம்பு, ஒருவகைக் கொடி, அடப்பங்கொடி, ஆட்டுக்கால் அடம்பு, கடலாரைக் கொடி;

2. சொல் பொருள் விளக்கம்

இது ஒருவகையான படரும் கொடி ஆகும். இது கடற்கரையிலும் வறண்ட மணல் மேட்டிலும் படர்ந்து வளரும்

 • இதன் இலை ஆட்டுக்காலின் குளம்படி போல இருக்கும்
 • இக்கொடியின் மலர் செந்நீல நிறத்தில் பெரியதாக இருக்கும்

இதன் இலைகளை சங்க இலக்கியங்களில், மானடியன்ன கவட்டிலை அடும்பு என்றும், சித்தர் இலக்கியங்களில் ஆட்டுக்கால்அடும்பு என்றும் கூறுகிறார்கள்.

 1. வறள்அடும்பு உருத்திரங்கண்ணனார்
 2. கரைஅமல்அடும்பு நல்லந்துவனார்
 3. கவட்டிலைஅடும்பு பெருங்கண்ணனார்
 4. பொம்மல் அடும்பு நல்வெள்ளையார்
 5. கவட்டிலைஅடும்பு நம்பி குட்டுவனார்
 6. ஆய் மலர்அடும்பு அம்மூவனார்.
 7. மாக்கொடிஅடும்பு  நம்பி குட்டுவன்
 8. மணற்கொடிஅடும்பு  உலோச்சனார்
 9. ஆய்பூஅடும்பு நல்லந்துவனார்
 10. வறள்அடும்பு  முடத்தாமக் கண்ணியார்
 11. அடைகரைதாழ்அடும்பு  பாலைக் கெளதமனார்.
அடும்பு
அடும்பு

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Ipomoea pes-caprae, Hareleaf, Ipomaea biloba, Beach Morning Glory,

இதில் pes-caprae- என்பது விலங்கினங்களின் குளம்பு என பொருட்படக் கூறப்பட்டுள்ளது

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின்
தார் மணி அன்ன ஒண் பூ கொழுதி – குறு 243/1,2

மானின் அடியைப் போன்ற கவர்த்த இலைகளைக் கொண்ட
(குதிரை)மாலையில் உள்ள மணியைப் போன்ற ஒள்ளிய பூவைக் கோதி

ஒண் பன் மலர கவட்டு இலை அடும்பின்
செம் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப – அகம் 80/8,9

ஒள்ளிய பலவாய மலர்களையுடைய கவடுபட்ட இலைகளையுடைய அடும்பினது
சிவந்த நிறமுடைய மெல்லிய கொடிகளை நின் தேர்ச்சக்கரம் அறுத்துவர

இது நீர்நிலைகளை ஒட்டி வளர்வது
அடப்பங்கொடி
அடப்பங்கொடி
கொடும் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும் – நற் 349/2

அடும்பு இவர் மணல் கோடு ஊர – குறு 248/5

அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய – பதி 51/7

அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த_கால் – கலி 132/16

அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும் – அகம் 320/9

வறள் அடும்பின் இவர் பகன்றை - பொரு 195

வறள் அடும்பின் மலர் மலைந்தும் - பட் 65

மா கொடி அடும்பின் மா இதழ் அலரி - நற் 145/2

பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை - நற் 272/3

மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின்/தார் மணி அன்ன ஒண் பூ கொழுதி - குறு 243/1,2

அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல் - குறு 401/1

ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உது காண் எம் - கலி 144/30

ஒண் பன் மலர கவட்டு இலை அடும்பின்/செம் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப - அகம் 80/8,9

அடும்பு அமர் ஆத்தி நெடும் கொடி அவரை - குறி 87

குன்று ஓங்கு வெண் மணல் கொடி அடும்பு கொய்தும் - நற் 254/2

அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர் - நற் 338/2
கடலாரை
கடலாரை
அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனை - குறு 248/5

அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி - குறு 349/1

தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல - பதி 30/6

அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய - பதி 51/7

கரை அமல் அடும்பு அளித்த ஆஅங்கு - கலி 127/21

அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த-கால் - கலி 132/16

அடும்பு கொடி சிதைய வாங்கி கொடும் கழி - அகம் 160/3

அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும் - அகம் 320/9
ஆட்டுக்கால் அடம்பு
ஆட்டுக்கால் அடம்பு
நெடும் கடை நின்று உழல்வது எல்லாம் அடும்பம் பூ - நாலடி:11 7/2

அடும்பு இவர் எக்கர் அலவன் வழங்கும் - ஐந்70:62/1

படும் புலால் பார்த்தும் பகர்தும் அடும்பு எலாம் - திணை150:51/2

அடும்பு ஆர் அணி கானல் சேர்ப்ப கெடுமே - பழ:194/3

அடும்பு அலரும் சேர்ப்ப அகலுள் நீராலே - பழ:202/3
ஆட்டுக்கால் அடம்பு
ஆட்டுக்கால் அடம்பு
அலவன் வழங்கும் அடும்பு இவர் எக்கர் - கைந்:53/1

அணங்கு இதுவோ காணீர் அடும்பு அமர் தண் கானல் - புகார்:7/67

அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா அழலே உமிழும் - தேவா-அப்:1032/3

அடும்பும் கொன்றையும் வன்னியும் மத்தமும் - தேவா-அப்:1905/1

அட்ட மா மலர் சூடி அடும்பொடு
வட்ட புன் சடை மா மறைக்காடரோ - தேவா-அப்:1157/1,2

நெருங்கிய நெடும் பெணை அடும்பொடு விரவிய - தேவா-சுந்:734/2

அடும்பு ஆக்கிய தொடை செம்_சடை_முதலோன் பணித்து அமைந்தான் - யுத்3:27 143/4

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *