Skip to content
அத்திரி

அத்திரி என்பது கோவேறு கழுதை

1. சொல் பொருள்

(பெ) கோவேறு கழுதை,

2. சொல் பொருள் விளக்கம்

சங்க இலக்கியத்தில் அத்திரி(கோவேறு கழுதை) என்றொரு விலங்கு வழங்குகின்றது .

கழிச்சேறு ஆடிய கணைக்கால்அத்திரி
குளம்பினுஞ் சேயிறா ஒடுங்கின்
கோதையும் எல்லாம் அதைவெண் மணலே – நற்றிணை 278

கழிச்சுறா எறிந்த புட்டாள்அத்திரி
நெடுநீர் இருங்கழிப் பரிமெலிந் தசைஇ
வல்வில் இளையரோ டெல்லிச் செல்லாது – அகம் , 120 .

கொடுநுகம் நுழைந்த கணைக்கால்அத்திரி
வடி மணி நெடுந்தேர் பூண ஏவாது -அகம் , 350.

அகவரும் பாண்டியும் மத்திரியு மாய்மாச்
சகடமுந் தண்டார் சிவிகையும் பண்ணி – பரிபாடல் , 10 : 18 – 17 .

தாரணி மார்பனொடு பேரணி யணிந்
வான வண்கைய னத்திரி யேற
மானமர் நோக்கியும் வைய மேறிக் – சிலப்பதிகாரம் , 8 : 118 – 120 .

அத்திரி என்னும் விலங்கைக் குதிரை போன்று பயன்படுத்தியதாகத் தெளிவாகின்றது . நெய்தல் நிலத்தில் கழிகளிலும் சேற்றிலும் மணலிலும் செல்வதற்கு அத்திரி உதவியதாகத் தோன்றுகின்றது . கணைக்கால் அத்திரியின் குளம்பில் சேயிறா ஒடுங்கினதாகக் கூறியதைக் காணலாம் . அத்திரியின் மேல் இவர்ந்து செல்வது வழக்கமாக இருந்தது . நுகத்தில் பூட்டித் தேரிழுக்கவும் பயன்படுத்தினர் . நீராடுந் துறைக்கு விழாக்காலத்தில் அத்திரியில் இவர்ந்து பெருவணிகர்கள் செல்வதைச் சிலப்பதிகாரமும் பரிபாடலும் கூறியுள்ளது . கோவலன் இராசவாகனமாகிய அத்திரியேறினான் என்று அடியார்க்குநல்லார் உரை கூறியதிலிருந்து கோவேறு கழுதை என்ற பெயர் வந்த முறை விளங்குகின்றது . அத்திரி என்ற விலங்கு ஆண் கழுதையும் பெண் குதிரையும் இணைந்து பெற்ற கலப் பின விலங்கு . இது பொதி சுமக்க நன்கு உதவும் . சங்க காலத்தில் இவ்விலங்கு கடல் வழியாக இறக்குமதியாகியிருக்கலாம் .

அத்திரி
அத்திரிகோவேறு கழுதை

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

mule

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

அகவரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மா
சகடமும் – பரி 10/16

அழைத்தற்கரிய மாட்டுவண்டியும், கோவேறு கழுதையும், தெரிந்தெடுத்த குதிரை பூட்டிய வண்டியும்

மேலும்,

கழி சேறு ஆடிய கணை கால்அத்திரி/குளம்பினும் சேஇறா ஒடுங்கின – நற் 278/7,8

கழி சுறா எறிந்த புண் தாள் அத்திரி/நெடு நீர் இரும் கழி பரி மெலிந்து அசைஇ – அகம் 120/10,11

கொடு நுகம் நுழைந்த கணை கால் அத்திரி/வடி மணி நெடும் தேர் பூண ஏவாது – அகம் 350/6,7

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *