சொல் பொருள்
(பெ) 1.திரள் (சோற்றுத் திரள்),
2. தோற்ற மன்னனைச் சுற்றி வெற்றி வீரர்கள் ஆடும் ஆட்டம்,
சொல் பொருள் விளக்கம்
1.திரள் (சோற்றுத் திரள்),
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
huge quantity (of boiled rice)
dance of victorius soldiers around the defeated king
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு – சிறு 194 குற்றுதலில் சிறந்த அரிசியால் ஆக்கின திரளான வெள்ளைச் சோற்றை அத்த வேம்பின் அமலை வான் பூ – குறு 281/3 பாலை நிலத்து வேம்பின் நிறைந்த வெள்ளிய பூக்கள் ஒள்வாள் அமலை ஆடிய ஞாட்பின் – அகம் 142/14 ஒள்வாள் அமலை என்னும் வெற்றிக் கூத்தை ஆடிய போர்க்களத்தின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்