அமுது என்பது பிணியை அகற்றுவது, அமிழ்தம் போன்ற உண்டி, இன்சுவை உணவு
1. சொல் பொருள்
(பெ) 1. அமிழ்தம் போன்ற உண்டி, 2. சோறு, 3. தேவாமிர்தம் 4. அமுதசாகரன் அடைக்கலமுத்து என்னும் புலவர்
2. சொல் பொருள் விளக்கம்
அமுது என்பது அமிர்தம், அமுதம், அமிழ்தம் ஆகியவற்றின் சுருக்கப்பெயராகப் பயன்பட்டுள்ளது எனினும், சிலவிடங்களில்
உணவு என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மிகவும் சுவையான உணவுகளை அமிழ்தம் போன்ற சுவையான உணவு என்று சொல்லும் வகையான் அவ்வகை உணவுகளே அமுது என்று சொல்லப்பட்டுள்ளன.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
cooked rice, elixir, medicine
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பலவகையான சுவையான உணவுவகைகளைப் பெரும்பாணாற்றுப்படை அடுக்குவதைப் பாருங்கள்.
வல்லோன் அட்ட பல்லூன் கொழுங்குறை
அரி செத்து உணங்கிய பெருஞ்செந்நெல்லின்
தெரிகொள் அரிசித் திரள் நெடும் புழுக்கல்
அரும் கடித் தீஞ்சுவை அமுதொடு பிறவும்
விருப்புடை மரபின் கரப்புடை அடிசில் – பெரும் 472 – 476
இங்கே தீஞ்சுவை அமுது என்பதற்கு இனிய சுவையுடைய அமிழ்தம் போன்ற உண்டிகளும் என்றே பொருள் கொள்கிறார்
பெருமழைப்புலவர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது