Skip to content

அமிழ்து

அமிழ்து

அமிழ்து என்பது நீர், கழிபெருஞ் சுவை, சோறு

1. சொல் பொருள்

(1) அமிழ்து என்றது நீர்

(2) அமிழ்து என்றார் கழிபெருஞ் சுவை

(3) அவிழ் – அவிழ்து – அமுது = சோறு.

பார்க்க அமிழ்தம், அமுது

2. சொல் பொருள் விளக்கம்

(1) அமிழ்து என்றது நீர். (பதிற்று. 17. ப. உ.)

(2) அமிழ்து என்றார் கழிபெருஞ் சுவையோடு உறுதி பயத்தல் உடைமையான். (திருக்கோ. 5. பேரா.)

(3) அவிழ் – அவிழ்து – அமுது = சோறு. மருமம் – மம்மம் – அம்மம் – அம்முது – அமுது = பால். பாலைக் குறிக்கும் அமுது என்னும் சொல்லும் சோற்றைக் குறிக்கும் அமுது என்னும் சொல்லொடு மயங்கி அமிழ்து என்னும் வடிவங் கொள்ளும். (திருக்குறள் மரபுரை. உரையெச்சம். 64.)

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *