Skip to content

சொல் பொருள்

(பெ) அரித்தெழும் ஓசையையுடைய ஒரு பறை, தட்டைப்பறை

சொல் பொருள் விளக்கம்

அரித்தெழும் ஓசையையுடைய ஒரு பறை, தட்டைப்பறை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

drum that makes cracking sound

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

விளைந்த கழனி, வன் கை வினைஞர் அரிப்பறை – மது 262

நெல் விளைந்த கழனியில், வலிய கையைக் கொண்ட வினைஞரின் அரிப்பறை

அரிப்பறையால் புள் ஓப்பி – புறம் 395/7

அரிப்பறையால் பறவைகளை ஓட்டி

பெருமுதுச் செல்வர் பொன்னுடைப் புதல்வர்
சிறு தோள் கோத்த செவ் அரிப்பறையின்
கண் அகத்து எழுதிய குரீஇப் போல – நற் 58/1-3

முதிர்ந்த செல்வர்களின் பொன் அணிகலன்களையுடைய புதல்வர்
தம் சிறிய தோளில் மாட்டிய செம்மையாக ஒலிக்கும் அரிப்பறையின்
மேல்பக்கம் வரைந்த குருவியைப் போல

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *