சொல் பொருள்

(வி) 1. அருந்து என்பதன் பிறவினை, உண்ணச்செய், 2. நுகரச்செய், அனுபவிக்கச்செய்,

சொல் பொருள் விளக்கம்

1. அருந்து என்பதன் பிறவினை, உண்ணச்செய்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

feed

cause to experience, enjoy

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஊன்சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும்
செம்மற்று அம்ம நின் வெம் முனை இருக்கை – புறம் 33/14,15

தசையொடு கூடிய சோற்றுத்திரளையை பாண் சுற்றத்திற்கு ஊட்டும்
தலைமை உடைத்து நினது வெய்ய முனையாகிய இருப்பிடம்

மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம்
அரும் பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள் – பெரும் 67,68

மலையில் உள்ளனவும், கடலில் உள்ளனவும்(ஆன) சிறந்த பயனைக் கொடுக்கும்
அரிய பொருளை (எல்லாரும்)நுகரச்செய்யும் திருத்தமான தம் வினையில் வலிய முயற்சியினையும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.