Skip to content

அரைவேக்காடு

சொல் பொருள்

அரைவேக்காடு – பதனற்ற அல்லது பக்குவமற்ற நிலைமை.

சொல் பொருள் விளக்கம்

வேக வைத்தல் பக்குவப் படுத்துதலாம். ‘சமையல்’ என்பதும், ‘சமயம்’ என்பதும் பக்குவப்படுத்துதல் பொருளவே. வேக்காடு முழுமையாக இருத்தல், வேண்டும் பக்குவமாகக் கருதப் படும். அரைவேக்காடு என்பது வெந்ததும் அன்று ; வேகாததும் அன்று, ஆதலால் இரண்டுங் கெட்ட நிலையதாம். இப்பொழுது அரசியல், சமயம் முதலியவற்றிலும் கல்வியிலும் கூட ‘அரை வேக்காடு, என்னும் வழக்கு பெருகிக் கொண்டு வருகின்றது. “அது ஓர் அரை வேக்காடு; பேசிப் பயனில்லை; விடு” என்பது அரை வேக்காட்டு மதிப்பீட்டுரை.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *