Skip to content
அறுகை

அறுகை என்பது அறுகம்புல்

1. சொல் பொருள்

(பெ) 1. அறுகம்புல், 2. ஒரு சங்ககால அரசன்,

2. சொல் பொருள் விளக்கம்

 அறுகம்புல் வேறு பெயர்கள் மூதண்டம், தூர்வை, மேகாரி, பதம்.

அறுகம்புல்
அறுகம்புல்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Harialli grass, Cynodon grass, Cynodon dactylon, Bermuda grass?;

a king of sangam period

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

அறுகை
அறுகை
சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி - பட் 256

மணி வார்ந்து அன்ன மா கொடி அறுகை/பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி - குறு 256/1,2

நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை/சேணன் ஆயினும் கேள் என மொழிந்து - பதி 44/10,11

பழம் கன்று கறித்த பயம்பு அமல் அறுகை/தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற - அகம் 136/11,12
அறுகம்புல்
அறுகம்புல்
மணி வார்ந்து அன்ன மா கொடி அறுகை
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி – குறு 256/1,2

நீல மணியின் கதிர்களை வரிசையாய் வைத்தாற்போன்ற கரிய கொடிகள் படர்ந்த அறுகம்புல்
செறிவாகப் பின்னிக்கிடந்ததை, மெல்லிய கொம்புகள் உள்ள தன் பெண்மானோடு உண்டு

அறுகை என்பவன் ஓர் அரசன். அவன் 5-ஆம் பதிற்றுப்பத்துப் பாட்டுடைத் தலைவன் கடல் பிறக்கு ஓட்டிய
செங்குட்டுவனுக்குக் ‘கேளிர்’ என்று குறிப்பிடப்படுகிறான்

நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை
சேணன் ஆயினும் கேள் என மொழிந்து – பதி 44/10,11

நுண்ணிய கொடியையுடைய உழிஞையின் பூவைச் சூடிய, வெல்லுகின்ற போரைச் செய்யும் அறுகை என்பவன்
தோலைவில் இருந்தாலும் உன்னை நண்பன் என்று கூறிக்கொண்டு,
அறுகை
அறுகை
வெள் நிற தாமரை அறுகை நந்தி என்று - மது:22/19

கொழும் கொடி அறுகையும் குவளையும் கலந்து - புகார்:10/132

அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்து-ஆங்கு - மணி:12/60

மழை கவின்று எழுந்த வார் கொள் மணி நிற அறுகை நெய் தோய்த்து - சிந்தா:12 2416/3

வேர் அறுகை பம்பி சுரை படர்ந்து வேளை பூத்து - முத்தொள்:23/1
அறுகம்புல்
அறுகம்புல்
அறுகை புல்லினும் வாகை தளிரினும் - இலாவாண:5/69

ஆவிரை அலரும் அறுகையும் செரீஇ - உஞ்ஞை:40/267

அம் தண் ஆவிரை அலரும் அறுகையும்
நந்தி வட்டமும் இடையிடை வலந்த - இலாவாண:3/31,32

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *