சொல் பொருள்
(பெ) – ஆடை, வேட்டி
துகில் அல்லது வஸ்திரம்.
சொல் பொருள் விளக்கம்
துகில் அல்லது வஸ்திரம். நீளமாக ஒரே நிலையாய் நெய்ததனை இடையிடையே யறுத்துத் தனித்தனி வஸ்திரமாக்குதலின் துகிலை யுணர்த்துவதாயிற்று. அறுக்கப் பட்டது அறுவை; ஈண்டு ‘ஐ’ செயப்படு பொருண்மை விகுதி முன்காலத்தில், (இக்காலத்திலும் பலவிடங்களில்), சாலியர் தறியின் கண் ஆடை நெய்கையில் ஒரே நிரையாய் நீளநெய்து கொண்டே போவார்கள். அவ்வாறே முழுதும் நெய்த பின்னர் அறுத்தற்கென இடம் விட்டிருந்த இடங்களில் அறுத்துத் தனித்தனியுடையாக்குவார்கள். இவ்வழக்கத்தையநுசரித்தே நம் தமிழ்மொழியின்
கண்ணே பிறசொற்களும் பிறந்திருக்கின்றன. உதாரணமாகத் ‘துணி’, ‘துண்டு’, ‘கூறை’ முதலிய சொற்களின் பொருட் காரணத்தையுமுய்த்துணர்க. துணிக்கப் படுதலிற் றுணியும், துண்டிக்கப்படுதலிற் றுண்டும், கூறுபடுத்தப்படுதலிற் கூறையு
மாயின. (தமிழ் வியா. 54)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cloth, garment
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரவு உரி அன்ன அறுவை நல்கி – பொரு 83 பாம்புச் சட்டைபோன்ற ஆடைகளைத் தந்து புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை தாது எரு மறுகின் மாசுண இருந்து – புறம் 311/2,3 சலவைப்பெண் துவைத்த தூய வெள்ளையான வேட்டி சாணம் மெழுகிய தெருவில் தூசுபட அமர்ந்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்