சொல் பொருள்
(பெ) மேலும் கீழும் அசைதல், அவ்வாறு அசையும் ஒரு பொருள் – மாலை, தானியக்கதிர்
சொல் பொருள் விளக்கம்
சரிகை முதலியவற்றால் விளங்கும் மாலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
movement up and down – an object that moves like that – garland, ear of corn
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை – நற் 169/8 வெள்ளிய பனங்குருத்தின் துண்டோடு சேர்த்துச் செய்த அசைகின்ற மாலையின் தொங்கலோடு கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல் – அகம் 13/19 வயற்பரப்பின் நெற்பயிர் ஈன்ற கவைத்த அடியைக்கொண்ட ஆடும் நெற்கதிர் அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை – அகம் 229/18 அழகிய தளிர்களைக் கொண்ட மாமரத்தின் அசைகின்ற கிளைகளின் மேல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்