சொல் பொருள்

(வி) 1. சுழலு, 2. மனம்சுழலு, வருந்து, 

சொல் பொருள் விளக்கம்

1. சுழலு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

to whirl

be agitated

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

திரு முகத்து அலமரும் பெரு மதர் மழை கண் – பதி 21/35

அழகிய முகத்தில் சுழலும் பெரிய மதர்த்த குளிர்ந்த கண்கள்

அலமரு நோக்கின் நலம் வரு சுடர் நுதல் – ஐங் 375/4

மருண்ட பார்வையும் பெண்மை நலம் வரும் சுடர்விடும் நெற்றியும்

யாமத்தும் துயில் அலள் அலமரும் என் தோழி – கலி 45/18

நள்ளிரவிலும் தூக்கம்கொள்ளாள், மனம்கலங்கி வருந்தினாள் என் தோழி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.