சொல் பொருள்
அலை – அலைத்தலாம் துன்புறுத்துதல்
கொலை – கொல்லுதல்
சொல் பொருள் விளக்கம்
இனிப் புலை கொலை என்பது புலால் உண்ணுதலையும், கொலை என்பது கொல்லுதலையும் குறிக்கும். அலையாவது அலை கிளர்வது போல் அடுத்தடுத்தும் துயர்பல செய்வதாம். “அலை மேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து” என்பது திருக்குறள் 551.
அலைப்பு, அலைச்சல் முதலிய சொற்களால் அலையின் பொருள் விளங்கும். ‘கொல்லான் கொலைபுரியான்’ என்னும் ஏலாதித் தொடர், கொல்லாதவனையும், கொன்று தந்த ஊனை விரும்பாதனையும் குறிக்கும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்