சொல் பொருள்

(பெ) 1. இரவு 2 அல்லாதது,

சொல் பொருள் விளக்கம்

1. இரவு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

night

that which is no more, that which is not

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அல்அங்காடி அழிதரு கம்பலை – மது 544

இரவுக்காலத்துக் கடையில் மிகுதியைத் தருகின்ற ஆரவாரம்

அன்று அவண் அசைஇ அல் சேர்ந்து அல்கி – மலை 158

அன்று அவ்விடத்தில் இளைப்பாறி, இரவிலும் (அவர்களுடன்)சேர்ந்து தங்கி

இல் ஆகியரோ காலை மாலை
அல் ஆகியர் யான் வாழும் நாளே – புறம் 232/1,2

இனி இல்லை ஆகுக காலையும் மாலையும்
அல்ல ஆக்குக யான் உயிர் வாழும் நாளும்

மிதி அல் செருப்பின் பூழியர் கோவே – பதி 21/23

மிதிக்கும் செருப்பு அல்லாத செருப்பு என்னும் மலையினையுடைய பூழியரின் அரசே
பூழியரின் ஊர் செருப்பு. ஆனால் காலில் அணிவதும் செருப்பு. எனவே காலில் அணியாத
செருப்பு என்பது பூழியர் நகரமாயிற்று.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.