Skip to content

சொல் பொருள்

(வி) 1. துளாவு,  2. கல,

2. (பெ) 1. விலங்குகளின் இருப்பிடம், குகை, 2.. நண்டுகளின் வளை, 3. புற்று, 4. மோர்,

சொல் பொருள் விளக்கம்

துளாவு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

stir, mix, cave, den, holes of crabs, anthill, buttermilk

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்தி – அகம் 207/14

தேன் கலந்து துளாவிய இனிய பாலை ஏந்தி

மொய்ம்பு இறந்து திரிதரும் ஒருபெருந் தெரியல்,
மணிதொடர்ந்தன்ன ஒண்பூங்கோதை
அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇ – மது 437-439

வலியைக் கடந்து திரியும் ஒன்றாகிய பெரிய வேப்பமாலையினையும்,
மாணிக்கம் ஒழுகினாற்போன்று ஒள்ளிய செங்கழுநீர் மாலையினையும்
அழகுவிளங்கும் மார்பில் முத்துமாலையோடே கலந்து அணிந்து

குரூஉ மயிர் யாக்கைக் குடாவடி உளியம்
பெரும் கல் விடர் அளை செறிய – திரு 313,314

கரிய நிறமுள்ள மயிரினையுடைய உடம்பினையும், வளைந்த அடியினையும் உடைய கரடி
பெரிய கல்வெடித்த குகையிலே சேர,

அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன – பொரு 9

வளையிலே வாழ்கின்ற நண்டின் கண்ணைப் பார்த்தாற்போன்ற

பாம்பு அளை செறிய முழங்கி வலன் ஏர்பு
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை – நற் 264/1,2

பாம்பு புற்றுக்குள் செறிந்திருக்குமாறு முழங்கி, வலப்பக்கமாக எழுந்து
மேகம் மழை பொழிந்த காண்பதற்கினிய காலை

அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி – பெரும் 163

மோரை விற்ற நெல்லுணவால் சுற்றத்தார் எல்லாரையும் உண்ணப்பண்ணி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *