சொல் பொருள்
(பெ) 1. நெல்லை இடித்துச் செய்த உணவுப்பண்டம், 2. பள்ளம், 3. விளைநிலம்
சொல் பொருள் விளக்கம்
1. நெல்லை இடித்துச் செய்த உணவுப்பண்டம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
riceflakes, shallow depression, cultivated land
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவல் எறி உலக்கை பாடு விறந்து, அயல கொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉம் – பெரும் 226, 227 அவலை இடிக்கும் உலக்கையின் ஓசி மிகுவதனால், அருகிலுள்ள வளைந்த வாயையுடைய கிளிகள் தமக்குப் பகையாகக் கருதி அஞ்சும் ஏறு உடை பெரு மழை பொழிந்து என அவல்தோறு ஆடுகள பறையின் வரி நுணல் கறங்க – அகம் 364/2,3 இடியையுடைய பெரிய மழை பெய்ததாகப் பள்ளங்கள்தோறும் ஆடுகளத்தில் ஒலிக்கும் பரைபோன்று வரியையுடைய தேரைகள் ஒலிக்க புல் அரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின் மெல் அவல் இருந்த ஊர்தொறும் – மலை 449,450 புல்லிய அடிமரத்தையுடைய காஞ்சிமரங்களும், நீர்வந்து மோதும் மதகுகளும், மென்மையான விளைநிலங்களும் இருந்த ஊர்கள்தோறும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்