Skip to content

சொல் பொருள்

(பெ) 1. நெல்லை இடித்துச் செய்த உணவுப்பண்டம், 2. பள்ளம், 3. விளைநிலம்

சொல் பொருள் விளக்கம்

1. நெல்லை இடித்துச் செய்த உணவுப்பண்டம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

riceflakes, shallow depression, cultivated land

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அவல் எறி உலக்கை பாடு விறந்து, அயல
கொடுவாய்க் கிள்ளை படுபகை வெரூஉம் – பெரும் 226, 227

அவலை இடிக்கும் உலக்கையின் ஓசி மிகுவதனால், அருகிலுள்ள வளைந்த வாயையுடைய கிளிகள் தமக்குப் பகையாகக் கருதி அஞ்சும்

ஏறு உடை பெரு மழை பொழிந்து என அவல்தோறு
ஆடுகள பறையின் வரி நுணல் கறங்க – அகம் 364/2,3

இடியையுடைய பெரிய மழை பெய்ததாகப் பள்ளங்கள்தோறும் ஆடுகளத்தில் ஒலிக்கும் பரைபோன்று வரியையுடைய தேரைகள் ஒலிக்க

புல் அரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின்
மெல் அவல் இருந்த ஊர்தொறும் – மலை 449,450

புல்லிய அடிமரத்தையுடைய காஞ்சிமரங்களும், நீர்வந்து மோதும் மதகுகளும்,
மென்மையான விளைநிலங்களும் இருந்த ஊர்கள்தோறும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *