சொல் பொருள்
(புலன்களின்) முனைப்புக் கெடுத்துத் தன் வயப்படுத்தி ஆட்கொள்வதையே அவித்தல் குறிக்கும்.
காய்கறிகளின் கடுமை, கடுப்புப் போக்கிப் பதப்படுத்திச் சுவைக்கு உகந்ததாக்குவது.
சொல் பொருள் விளக்கம்
அவித்தல் என்பது அழித்தல் அன்று. (புலன்களின்) முனைப்புக் கெடுத்துத் தன் வயப்படுத்தி ஆட்கொள்வதையே அது குறிக்கும். காய்கறிகளை நாம் அவிப்பது அவற்றை அழிப்பதற்கோ, சுட்டுக் கருக்குவதற்கோ சுவை கெடுப்பதற்கோ அன்று. அவற்றின் கடுமை, கடுப்புப் போக்கிப் பதப்படுத்திச் சுவைக்கு உகந்ததாக்குவதற்கேயாம். (திருக்குறள். மணிவிளக்கவுரை. ஐ. 310)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்