சொல் பொருள்

(வி) ஒளிர்

சொல் பொருள் விளக்கம்

ஒளிர்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

glowing

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மணிகளோ, உயர்ந்த கற்களோ பதிக்காத தூய தங்கத்தால் ஆன புத்தம் புதிய
தங்க நகையின் பளபளப்பை அவிர்தல் எனலாம்.

எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை – அகம் 0/10

நெருப்பு எரிவது போன்ற ஒளிர்ந்து பிரகாசிக்கும் புரியையுடைய சடை

ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி – மது 666

ஒள்ளிய பொன்னாலான ஒளிரும் அணிகலன்கள் ஒலிக்க நடந்து

பார்க்க இலங்கு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.