Skip to content

சொல் பொருள்

அவிழ்சாரி – மானமிலி

சொல் பொருள் விளக்கம்

அவிழ் – அவிழ்த்தல்; இவண் உடையை அவிழ்த்தல்; சாரி- திரிதல், உடையை அவிழ்த்தல். “அவிழ்த்துப் போட்டுத் திரியவா செய்கிறேன்” “அவிழ்ழ்த்துப் போட்டு ஆடவா செய்கிறேன்” என்னும் வழக்குகளில் உண்மை அறிக. திரிதலும், ஆடலும் இந்நாள் நச்சு நாகரிகத்தின் இச்சை விளையாடல்களாகத் திகழ்கின்றன. சாரி என்பது திரிதல் பொருளது. ‘எறும்புச் சாரி புதுமுறை ; ‘குதிரைச்சாரி’ பழமுறை ; ‘சாரி போதல்’ ஒழுங்குறப்போதல், அவிழ்சாரியோ ஒழுங்கறப் போதல் ‘அவிழ்சாரி (அவுசாரி) பேச்சை என்னிடம் எடுக்காதீர்கள்” என்பது வழக்குரை.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *