அவிழ்த்து விடுதல்

சொல் பொருள்

அவிழ்த்து விடுதல் – இல்லாததும் பொல்லாததும் கூறுதல்.

சொல் பொருள் விளக்கம்

கட்டில் இருந்து விலக்கி விடுதல் அவிழ்த்து விடுதல் எனப்படும். ஆடு மாடுகளை மேய்ச்சல் நிலத்திற்கு அவிழ்த்து விடுதல் நடைமுறை. கன்றுகளை அவிழ்த்து விட்டுத் தாயிடம் பாலூட்டுதலும் கறத்தலும் எங்கும் காணுவது. தாய் குழயதைக்குப் பாலூட்டல் ‘அவிழ்த்து விடுதல் எனவும் சொல்லப்படும். கச்சு, மாரார்ப்பு என்னும் மார்க்கட்டு என்பவற்றை அவிழ்த்து விட்டு பாலூட்டலால் அதனையும் அவிழ்த்து விடுதல் என்று குறிப்பது உண்டு. ஆனால் ஒருவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாம் செய்திகளை இட்டுக்கட்டி “உண்மைபோல் திரித்துக் கூறுதலை அவிழ்த்து விடுதல் என்பதும் உண்டு. “என்ன அவிழ்த்து விடுகிறாய்; எனக்குத் தேறியாதா?” எனின் நீ பொய் கூறுகிறாய் என்பது பொருளாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.